Facebook: பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க மார்க் சொன்ன 5 வழிகள்!

Facebook – Instagram: இப்போது நீங்கள் பேஸ்புக்-இன்ஸ்டாகிராம் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அவர் இந்த தளங்கள் வாயிலாக பணம் சம்பாதிப்பதற்கான சில வழிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்தி நீங்களும் பணம் சம்பாதிக்க விரும்பினால், இந்த சிறப்புத் தகவல் உங்களுக்கானது.

பேஸ்புக் மார்க் சக்கர்பெர்க் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கின் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதில், 2024ஆம் ஆண்டிற்குள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வருவாய் பகிர்வு நிறுத்தப்படும் என்று கூறினார்.

Telegram Premium: கூடுதல் அம்சங்கள் வேண்டுமா; பணத்த கட்டு – ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்ட டெலிகிராம்!

2024ஆம் ஆம்ண்டிற்குள் Facebook மற்றும் Instagram இல் வருவாய் பகிர்வை நிறுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ள மார்க், பணம் செலுத்திய ஆன்லைன் நிகழ்வுகள், சந்தாக்கள், பேட்ஜ்கள், புல்லட்டின்கள் ஆகியவை இதில் அடங்கும் என்று கூறியுள்ளார்.

கூடுதலாக, சக்கர்பெர்க் இரண்டு சமூக வலைத்தளங்களில் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளை படைப்பாளிகளுக்கு அறிவித்தார். இந்த புதிய அம்சங்கள் “படைப்பாளர்களுக்கு மெட்டாவெர்ஸ் அணுகலை எளிதாக்கும்” என்று கூறினார்.

5G Price: 5ஜி மொபைல் டேட்டா கட்டணம் இது தான்… அமைச்சர் வெளியிட்ட இனிப்பான செய்தி!

இந்த நிலையில் மார்க் சக்கர்பெர்க் கூறிய பணம் சம்பாதிக்கும் 5 புதிய வழிமுறைகளைக் காணலாம்.

Interoperable Subscriptions:
இந்த அம்சம் படைப்பாளிகளுக்கு வருவாயை ஏற்படுத்த உதவும். சந்தாக்கள் மூலம் படைப்பாளிகள் வருவாய் ஈட்ட முடியும்.

Facebook Stars:
நிறுவனம் ஸ்டார்ஸ் எனப்படும் டிப்பிங் அம்சத்தை தகுதியுள்ள அனைத்து படைப்பாளர்களுக்காகவும் தரவுள்ளது. இதன் மூலம் அதிகமான மக்கள் தங்கள் ரீல், லைவ் அல்லது வீடியோக்களைப் பணமாக்க முடியும்.

Vikram Movie: விக்ரம் படத்திற்கு முன்பே பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா; எந்த காட்சினு தெரியுமா?

Monetizing Reels:
பேஸ்புக்கில் அதிகமான படைப்பாளிகளுக்கு Reels Play போனஸ் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இது, கிரியேட்டர்களை Facebook-இல் இருந்து Instagram ரீல்களை குறுக்கு இடுகையிடவும், அங்கேயும் பணமாக்கவும் அனுமதிக்கும்.

Nothing Phone (1): ஏலத்தில் விற்றுதீர்ந்த நத்திங் போன் 1 – அதிகபட்ச ஏலத்தொகை எவ்வளவு தெரியுமா?

Creator Marketplace:
நிறுவனம் இன்ஸ்டாகிராமில் படைப்பாளர்களைக் கண்டறிந்து பணம் செலுத்தக்கூடிய இடங்களின் தொகுப்பை சோதித்து வருகிறது என்று மெட்டா தலைவர் தெரிவித்துள்ளார். பிராண்டுகள் புதிய கூட்டாண்மை வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

Jio Recharge: ஜியோவின் அதிரடி திட்டம்! வெறும் 75 ரூபாய்க்கு அத்தனைப் பயன்கள்!

Digital Collectibles:
இன்ஸ்டாகிராமில் படைப்பாளர்களுக்கான NFT ஆதரவை நிறுவனம் விரிவுபடுத்துகிறது. “இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் குறுக்கு இடுகையிடும் வகையில், இந்த அம்சத்தை விரைவில் பேஸ்புக்கில் கொண்டு வருவோம்” என்று மார்க் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.