DHFL ரூ.34,615 கோடி வங்கி கடன் மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடி வழக்கு..!

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பை ரூ.34,615 கோடிக்கு ஏமாற்றியதற்காக முன்னாள் டிஎச்எஃப்எல் ப்ரோமோட்டர்களான கபில் மற்றும் தீரஜ் வாத்வான் மீது சிபிஐ புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது.

சிபிஐ அமைப்பு இதுவரையில் பதிவு செய்த வங்கி மோசடி வழக்களில் டிஎச்எஃப்எல் ப்ரோமோட்டர்கள் மீதான வழக்கு தான் மிகப்பெரியதாகும். சமீபத்தில் ஏபிஜி ஷிப்யார்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.22,842 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமாக மும்பையில் மட்டும் 12க்கும் அதிகமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

யாரு சொன்னது.. ஏப்ரல் 20க்கு பிறகு நாங்கள் ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரியே வாங்கல

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (டிஹெச்எஃப்எல்) நிறுவனத்தின் முன்னாள் சிஎம்டி-யாக இருந்த கபில் வாத்வான், டைரக்டர் தீரஜ் வாதவான் மற்றும் ஆறு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான கூட்டமைப்பில் 34,615 கோடி ரூபாய் அளவிலான வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

2021 ஆம் ஆண்டில், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, DHFL நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் மற்றும் முந்தைய நிர்வாகத்தை வங்கிக் கடன் மோசடி தொடர்பாக விசாரிக்குமாறு சிபிஐக்கு கடிதம் எழுதியிருந்தது. அப்போது இந்த கடன் மோசடியின் மதிப்பாக ரூ. 40,623.36 கோடி (ஜூலை 30, 2020 வரை) என குறிப்பிட்டு இருந்தது.

கேபிஎம்ஜி
 

கேபிஎம்ஜி

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது புகாரில், DHFL நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் மற்றும் முந்தைய நிர்வாகம் செய்த வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின் விலகல், கணக்குகளை கையாளுதல், மறைத்தல், வெளியிடப்படாத வங்கிக் கணக்குகள் மற்றும் தவறான விளக்கங்கள் என பல முறைகேடுகளை கேபிஎம்ஜி என்ற தணிக்கை நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளை ஆதாரமாக வைத்து புகார் அளித்தது.

யெஸ் வங்கி கடன் மோசடி

யெஸ் வங்கி கடன் மோசடி

யெஸ் வங்கி கடன் மோசடி செய்ததாக சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் பதிவு செய்த வழக்குகள் தொடர்பாக முன்னாள் டிஎச்எஃப்எல் தலைவர்களான கபில் மற்றும் தீரஜ் வாத்வான் தற்போது சிறையில் உள்ளனர். யெஸ் வங்கி துணை நிறுவனர் ராணா கபூர் மும்பையின் புறநகரில் உள்ள தலோஜா சிறையில் உள்ளார்.

பிராமல் கேப்பிடல்

பிராமல் கேப்பிடல்

இந்நிலையில் செப்டம்பர் 2021-ல் பெரும் போட்டிக்கு மத்தியில் பிராமல் கேப்பிடல் அண்ட் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் DHFL நிறுவனத்தை 34,250 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது.இந்த தொகையை பிராமல் கேப்பிடல் அண்ட் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் பணமாகவும் மற்றும் மாற்ற முடியாத கடன் பத்திரங்களாகவும் கொடுத்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: dhfl cbi சிபிஐ

English summary

DHFL Rs 34,615-crore case; biggest bank fraud case registered by CBI

DHFL Rs 34,615-crore case; biggest bank fraud case registered by CBI DHFL ரூ.34,615 கோடி வங்கி கடன் மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடி வழக்கு..!

Story first published: Wednesday, June 22, 2022, 19:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.