அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டது.
இதனை நியூயார்க்கின் மேயர் எரிக் ஆடம்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் வாகனங்களில் முதற்கட்டமாக 100 வாகனங்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டதாகவும், அழிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களின் கழிவுகள் அனைத்தும் பழைய உலோகங்களாக மாற்றப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும் என்று நியூயார்க் மேயர் தெரிவித்தார்.