கச்சா எண்ணெய் விலை 5% திடீர் சரிவு: என்ன காரணம்?

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொருட்களின் தேவை பாதிக்கப்படுவதால் வர்த்தகர்கள் அதிக கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை காரணமாக கச்சா எண்ணெயின் விலை 5 சதவீதத்துக்கும் மேலாக சரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வங்கி பங்குகள் 55% ஏற்றம் காணலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்புகள்..!

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் 5.6 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 103.31 டாலர் என வர்த்தமாகி வருகிறது. அதேபோல் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 5.2 சதவீதம் குறைந்து 108.62 டாலர் என வர்த்தகமாகி வருகிறது.

இரண்டு காரணங்கள்

இரண்டு காரணங்கள்

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யா போர் காரணமாக பொருளாதாரம் இறுக்கமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றன. அதேபோல் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஒரு சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரலாறு காணாத பணவீக்கம்
 

வரலாறு காணாத பணவீக்கம்

மேற்கண்ட இரண்டு காரணங்களால் கடந்த சில மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உச்சத்துக்கு உயர்ந்தது என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ளதும், மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்து வருவதாலும், உலகம் முழுவதிலும் உள்ள பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் சரிந்து வருகிறது.

மீண்டும் உயரும்

மீண்டும் உயரும்

இதுகுறித்து ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஜெரோம் பவல் அவர்கள் கூறியபோது, ‘எல்லோருடைய பார்வையும் தற்போது கச்சா எண்ணெயை நோக்கி தான் உள்ளது என்றும் நிச்சயம் இதற்கு ஒரு விடிவுகாலம் ஏற்படும் என்றும் தெரிவித்தார். மேலும் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் சரிந்தாலும் கண்டிப்பாக மீண்டும் மேல் நோக்கி செல்லும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

தேவை அதிகம்

தேவை அதிகம்

சப்ளைக்கு மேல் பொருட்களின் தேவை இருப்பதால், வளர்ச்சி விகிதங்கள் மெதுவாக இருந்தாலும் சந்தைகள் இறுக்கமாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். கச்சா எண்ணெயின் விலை பல்வேறு காரணங்களுக்காக சரிந்து வந்தாலும் மீண்டும் கச்சா எண்ணெய் உயரவே அதிக வாய்ப்பிருப்பதாக கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Oil prices plunge more than 5% on recession fears

Oil prices plunge more than 5% on recession fears | கச்சா எண்ணெய் விலை திடீர் சரிவு: என்ன காரணம்?

Story first published: Wednesday, June 22, 2022, 16:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.