ஓபிஎஸ் பாதுகாப்பு குறித்து அறிய காவல்துறை பாதுகாப்போடு சென்றதாகவும் அப்போது பெஞ்சமின் அடியாட்களோடு இருந்ததாகவும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா நடக்காதா என திக் திக் மனநிலையோடு நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது…
பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் ஓபிஎஸ் வருகைக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்பது குறித்து பார்வையிட அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஸ்ரீவாரி கல்யாண மண்டபம் சென்றிருந்தோம். எங்களை அனைவரையும் வழிமறித்து விட்டனர்
எங்களை போகக் கூடாது என வழி மறிப்பதில் என்ன நியாயம். மண்டபத்தின் உள்ளே பெஞ்சமின் உள்ளிட்ட அவருடைய அடியாட்கள் எங்களை தடுத்தார்கள். நாங்கள் வரும் வழியில் எங்களுக்கு கிடைக்க பெற்ற செய்தியின் அடிப்படையில் பேனர் கிழிக்க பட்டதாக தெரிகிறது
ஆனால் நாங்கள் தான் 10 மேற்பட்ட பெண்களை கொண்டு வந்து பேனரை கிழித்ததாக கூறியுள்ளனர். இதுபோன்று பேனர்களை கிழிக்கும் செயல்களை எங்கள் தலைவர் செய்ய மாட்டார், இது போன்ற சில்லறை செயல்களை அவர்கள் தலைவர் தான் செய்வார் தற்போது முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் எங்கள் மீது பொய் புகார் அளித்துள்ளார் என பேசினார்.
பேனர் கிழிப்பு விவகாரம் போலீசில் புகார்.
சென்னை வானகரம் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள திருமண மண்டபத்தை நோக்கி ஒபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர்.
போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு திரும்ப அழைத்துச் செல்லும்போது வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்ததாக அதிமுக வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர்ராஜா (எ) பேரழகன் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தலைமையில் வந்த கும்பல் திரும்பிச் செல்லும்போது பேனரை இருந்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரில் குறிப்பிட்டு உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM