Samsung Galaxy F13 Price: சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போனான Galaxy F13 போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலை சாம்சங் போன் நீலம், பச்சை, காப்பர் ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் வகையில் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு சக்திவாய்ந்த 6,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விலை உங்களை ஆச்சரியப்படுத்தும்.
Facebook: பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க மார்க் சொன்ன 5 வழிகள்!
சாம்சங் கேலக்ஸி எஃப் 13 விலை (Samsung Galaxy f14 Price)
புதிய மலிவு விலை சாம்சங் போன் ஜூன் 29ஆம் தேதி, பகல் 12 மணிக்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. பிளிப்கார்ட், சாம்சங் இணையதளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
Samsung Galaxy F13 போன் இரு வகைகளில் வருகிறது. 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பகம் கொண்ட வகையின் விலை ரூ.11,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 4ஜிபி + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.12,999 ஆக உள்ளது.
இதில் சிறப்பு என்னவென்றால், அறிமுக சலுகையில் இந்த போனை நீங்கள் ரூ.10,999 என்ற விலையில் வாங்கலாம். ஆம், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
Telegram Premium: கூடுதல் அம்சங்கள் வேண்டுமா; பணத்த கட்டு – ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்ட டெலிகிராம்!
சாம்சங் கேலக்ஸி எஃப் 13 அம்சங்கள் (Samsung Galaxy f14 specifications)
சாம்சங் கேலக்ஸி எஃப்13 போனில் 6.6 இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுக்கப்பட்டுள்ளது. இந்த போன் எக்ஸினோஸ் 850 புராசஸர் (Exynos 850) ஆதரவுடன் உள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும்.
போட்டோஸ்:மூன்று நிறங்கள்; செம லுக்கில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஃப்13 பட்ஜெட் போன்!
முன்பக்கம் 8 மெகாபிக்சல் கேமரா செல்பி, வீடியோ அழைப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஃப்13 சக்தி வாய்ந்த 6000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டு சக்தியூட்டப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 15 வாட் வேகமான சார்ஜிங் ஆதரவு வழங்கப்படும்.
சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஆட்டோ டேட்டா ஸ்விட்ச்சிங் அமைப்புடன் வருகிறது. தொலைபேசி தானாகவே ஒரு சிம்மில் இருந்து மற்றொரு சிம்மிற்கு டேட்டாவை மாற்றும் திறன் கொண்டது.
எளிதாக சொல்ல வேண்டும் என்றால், மாறுதல் பயன்முறையின் உதவியுடன், வைஃபை அல்லது முதன்மை சிம்மில் நெட்வொர்க் இல்லை என்றால், தொலைபேசி தானாகவே Wi-Fi இலிருந்து மொபைல் தரவுக்கு மாறும். மேலும், மொபைல் டேட்டா முதன்மை சிம்மிலிருந்து இரண்டாம் நிலை சிம்மிற்கு மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Samsung-Galaxy-F13 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Exynos 850டிஸ்பிளே6.6 inches (16.76 cm)சேமிப்பகம்64 GBகேமரா50 MP + 5 MP + 2 MPபேட்டரி6000 mAhஇந்திய விலை14999ரேம்4 GBமுழு அம்சங்கள்
Samsung-Galaxy-F13Samsung Galaxy F13 128 GB 4 GB