நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் ‘PMB அரிசி’யை (PMB Rice) அடுத்த வாரம் கொழும்பு மக்களுக்கு விற்பனை செய்ய ,விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த அரிசி 5 மற்றும் 10 கிலோவாக பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் பல இடங்களில் அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பில் 200,000 அரிசி பொதிகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.