சி.கே. பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தனது பெருமை மிகுந்த அடையாளமான கண்டெஸா பிராண்டை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தனித்துவ அடையாளமாக விளங்கிவரும் கண்டெஸா பிராண்டை SG கார்ப்பரேட் மொபிலிட்டி என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்த ஒப்பந்தம் கடந்த 16ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது என்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நிறைவேறிய பின்னர் இந்த பிராண்ட் மாற்றம் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜூன் மாதம் கெடு விதித்த சீனா-வின் கிரேட் வால் மோட்டார்ஸ்.. டீலா..? நோ டீலா..?
கண்டெஸா கார்கள்
கடந்த 1980களில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கண்டெஸா கார்கள் மோட்டார் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
சொகுசு கார்
கடந்த 1980களில் கண்டெஸா அறிமுகம் செய்யப்பட்ட போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகச் சில சொகுசு கார்களில் இதுவும் ஒன்று. கடந்த 80களில் இந்த கார் பொதுமக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது என்பதும் 2002 ஆம் ஆண்டு வரை இந்த கார் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எஞ்சின் வடிவமைப்பு
கண்டெஸா கார் 1970களின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதும், இதில் BMC B-சீரிஸ் எஞ்சின் மூலம் இயக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கார் சுமார் 30 வருடங்களாக கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விற்பனை குறைவு
ஆனால் அதே நேரத்தில் ஜிஎம், ஃபோர்டு, ஃபியட், டாடா போன்ற நிறுவனங்களின் நவீன கார்களின் வருகைக்கு பின்னர் கண்டசாலாவின் தேவை குறைய ஆரம்பித்தது. 2002ஆம் ஆண்டு முதல் படிப்படியாக உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில் அதன் விற்பனையும் வெகுவாக சரிந்தது.
விற்பனை
இந்த நிலையில் தான் கண்டெஸா பிராண்டை SG கார்ப்பரேட் மொபிலிட்டி நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindustan Motors agreed to sell ‘Contessa’ brand to SG Corporate Mobility
Hindustan Motors agreed to sell ‘Contessa’ brand to SG Corporate Mobility | ஹிந்துஸ்தான் மோட்டாரில் ‘கண்டெஸா’ பிராண்ட் விற்பனை: யாருக்கு தெரியுமா?