தங்கம் விலையானது பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது.
இது அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், சரிவினைக் கண்டுள்ளது.
தங்கம் விலையானது இன்று குறைந்திருந்தாலும், இன்னும் ரேஞ்ச் பவுண்ட்டாகவே காணப்படுகின்றது. இது மத்திய வங்கிகள் இனியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்குமா? அடுத்து என்ன செய்ய போகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது என்ன செய்ய போகிறது? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
தங்கம் விலை குறையலாம்.. 3 நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு.. ஏன்.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு?
வட்டி மீண்டும் அதிகரிக்கலாம்
ஏற்கனவே அமெரிக்காவின் மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர இரு முறை வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் கூட்டத்திலும் 75 அடிப்படை புள்ளிகள் வட்டியை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பரில் 50 அடிப்படை புள்ளிகளை அதிகரிக்கலாம் என்றும் ராய்ட்டர்ஸ் கணிப்புகள் கூறுகின்றன.
டாலர் ஏற்றம்
தொடர்ந்து சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது ஒரு புறம் அதிகரித்து வந்தாலும், ஏற்கனவே வட்டி அதிகரிப்பு செய்துள்ள நிலையில், டாலரின் மதிப்பானது வலுவடைந்து காணப்படுகின்றது. இது தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. வலுவான டாலரினால் மற்ற கரன்சிதாரர்களுக்கு விலை உயர்ந்ததாக தங்கம் மாறியுள்ளது.
வட்டியில்லா முதலீடு
வட்டி விகிதம் அதிகரிப்பு, பத்திர சந்தை ஏற்றம் என பலவும் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. எப்படியிருப்பினும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை என்பது தொடர்ந்து தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகள் அடுத்த கட்ட தடை குறித்த ஆலோசனையையும் நடத்தி வருகின்றன. இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சர்வதேச சந்தையில் நிலவரம் என்ன?
சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது சற்று குறைந்து, 1829.35 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே போல வெள்ளி விலையும் 1.73% குறைந்து, 21.392 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையிலும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக பெரியளவில் மாற்றமின்றி, தொடக்கத்தில் சற்று சரிவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை சரிவு
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இதனிடையே ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4755 ரூபாயாகவும், 8 கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, 38,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, 5186 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 184 ரூபாய் குறைந்து, 41,488 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 51,860 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
ஆபரணத் தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், வெள்ளி விலையானது சமீபத்திய நாட்களாக பெரியளவில் மாற்றம் காணவிலை. இன்றும் கிராமுக்கு 66.30 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 663 ரூபாயாகவும், கிலோவுக்கு 66,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
good news! gold prices on 22nd June 2022: gold prices down on strong dollar
In Chennai, the price of jewellery gold fell by Rs 20 to Rs 4755 per gram and by Rs 160 to Rs 38,040 per 8 grams.