உக்ரைன் தானியங்கள் ஏற்றுமதிக்கு தயார்… களத்தில் குதிக்கும் முக்கிய நாடு


கருங்கடல் துறைமுகங்களில் தற்போது முடங்கியுள்ள தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும் நோக்கில், வரும் வாரங்களில் ரஷ்ய, உக்ரைன் மற்றும் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த துருக்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல்லில் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு முன்னதாக கருங்கடலில் சாத்தியமான பாதுகாப்பான கடல் வழித்தடத்தின் விவரங்களை விவாதிக்க துருக்கிய பாதுகாப்பு அமைச்சக குழு ஒன்று இந்த வாரம் ரஷ்யாவிற்கு விஜயம் செய்யும் எனவும் தகவல் கசிந்துள்ளது.

குறித்த தகவலை ரஷ்யாவின் முக்கிய செய்தி ஊடகமும் உறுதி செய்துள்ளது. மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதியின் முதன்மை செய்தித்தொடர்பாளரும் இது தொடர்பில் உறுதி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

உக்ரைன் தானியங்கள் ஏற்றுமதிக்கு தயார்... களத்தில் குதிக்கும் முக்கிய நாடு

மில்லியன் கணக்கான டன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் தற்போது உக்ரேனிய துறைமுகங்களில் சிக்கியுள்ளன.
அவை ரஷ்யப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன அல்லது ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் சிக்கியுள்ளன என்றே தேரிய வந்துள்ளது.

மேலும் ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள கருங்கடலில் போடப்பட்டுள்ள கண்ணிவெடிகளின் ஆபத்தையும் தானிய ஏற்றுமதிக்கான கப்பல்கள் எதிர்கொள்கின்றன.

இந்த நிலையில், துருக்கி, உக்ரைன், ரஷ்யா மற்றும் ஐ.நா ஆகிய நாடுகளுக்கு இடையே நான்கு வழி பேச்சுவார்த்தையானது வரும் வாரங்களில் இஸ்தான்புல்லில் நடைபெறும் என கூறப்படுகிறது.

உக்ரைன் தானியங்கள் ஏற்றுமதிக்கு தயார்... களத்தில் குதிக்கும் முக்கிய நாடு

குறித்த கூட்டங்களில் துருக்கி ஜனாதிபதியும் ஐக்கிய நாடுகள் மன்ற பொதுச்செயலாளரும் கலந்து கொள்வார்கள் என்றே நம்பப்படுகிறது.
உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசாவிலிருந்து உக்ரைனின் மேற்பார்வையின் கீழ் மூன்று பாதுகாப்பான வழித்தடங்களை உருவாக்கும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது என்றும்,

உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் உணவுப் பொருட்களை அங்கிருந்து அனுப்பப்படும் என்றும் குறித்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து எதிர்வரும் 6 முதல் 8 மாதங்களில் 30 முதல் 35 மில்லியன் டன் தானியங்களை அங்கிருந்து ஏற்றுமதி செய்ய முடியும் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

உக்ரைன் தானியங்கள் ஏற்றுமதிக்கு தயார்... களத்தில் குதிக்கும் முக்கிய நாடு

ஆனால் பாதுகாப்பான திட்டம் தொடர்பில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது.
கண்ணிவெடி ஆபத்து அதிகமிருப்பதால் ஐக்கிய நாடுகள் மன்றம் முக்கிய திட்டமொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் துருக்கி வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, குறித்த முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு அளித்துள்ளது, ஆனால் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளாமல், சாலை மார்க்கம் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான வழிகளைத் தேடும் உக்ரைன் தரப்பில் இருந்து நம்பிக்கையான பதில் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.