விவசாயி வீட்டில் இருந்து 12 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், நாகனேந்தல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்காக சென்றனர். மாலையில் வீடு திரும்பும் போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது அறைகளில் இருந்த பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளன. பீரோவில் வைக்கப்பட்ட .1 லட்சத்து 95 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்டன.
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மூலம் அங்கிருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.