உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது அந்நாட்டினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் வந்த நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜெர்மனியில் இருந்து தென்கொரியாவிற்கு திரும்பிய நபருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.