தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சென்னையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த ஒரு நாள் மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. மேலும் கனமழை தொடர வாய்ப்புள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.