யாழ்ப்பாணத்தில் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.
பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு ஒரு லீற்றர் டீசல் மற்றும் பெட்ரோல் தலா 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
கறுப்பு சந்தை
விவசாயம் செய்பவர்கள் மற்றும் அத்தியாவசிய பயணங்கள் செல்பவர்கள் கறுப்பு சந்தையில் அதிக விலை கொடுத்து எரிபொருளை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்பவர்கள் மோசடியான முறையில் பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளது.
எரிபொருள் மோசடி
பல்வேறு வாகனங்களில் வரிசையில் நின்று பெறும் எரிபொருளை கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.