தங்கம் விலையானது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஆபரணத் தங்கம் விலையானது ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.
எனினும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவினைக் கண்டே காணப்படுகின்றது.
தொடர்ந்து அமெரிக்க மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. இப்படி ஒரு நிலைக்கு மத்தியில் தான் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.
இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவுக்கு தோள் கொடுக்கலாம்.. எப்படி.. அமெரிக்கா பரபர கருத்து!
தங்கம் விலையில் அழுத்தம்
தொடர்ந்து அமெரிக்க டாலர் மற்றும் பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வரும் நிலையில், தொடர்ந்து தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அழுத்தத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியின் ஜெரோம் பவலின் சமீபத்திய கருத்துகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது தொடர்ந்து அழுத்தத்தில் காணப்படுகின்றது. எனினும் இது வரவிருக்கும் பி எம் ஐ, வேலையின்மை நலன் குறித்த தரவானது வெளியாகவிருக்கும் நிலையில், அது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைடுவேயாக இருக்கலாம்
எனினும் தொடர்ந்து ரெசசன் அச்சம் நிலவி வரும் நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். பங்கு சந்தையில் தங்கம் விலை சரிவில் காணப்படும் நிலையில், இது தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என கருத்தும் இருந்து வருகின்றது. இதனால் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சைடுவேயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச சந்தை நிலவரம்?
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 4.75 டாலர்கள் குறைந்து, 1833.70 டாலராக இருந்தது. இதே வெள்ளி விலையானது 0.62% குறைந்து, 21.293 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதேபோல இந்திய சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சரிவில் காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை சரிவு
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இதனிடையே ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 4770 ரூபாயாகவும், 8 கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 38,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து, 5204 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 144 ரூபாய் அதிகரித்து, 41,632 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 52,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
ஆபரணத் தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், வெள்ளி விலையானது சமீபத்திய நாட்களாக பெரியளவில் மாற்றம் காணவில்லை. இன்றும் கிராமுக்கு 66 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 660 ரூபாயாகவும், கிலோவுக்கு 66,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
gold prices may down amid selling pressure after powell’s comment
Gold prices has fallen in the international market. However, the price of jewelry gold continues to rise.