பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று கூறியுள்ள நிலையில். கூட்டத்திற்கு வந்த பெரும்பாலான உறுப்பினர்கள் வருகைப்பதிவேட்டில் கையெடுத்திடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் கடந்த வாரம நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கையை ஏற்று்ககொண்ட கட்சி நிர்வாகிகள் கட்சியில் ஒற்றை தலைமை குறித்து யோசிக்க தொடங்கினா.
இதனிடையே கட்சி யாருடைய தலைமையில் இயங்கும் என்பது குறித்து இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் தங்களது ஆதவாளர்களுடன் கடந்த ஒருவாரமாக தனித்தனியாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒபிஎஸ் இபிஎஸ்க்கு கடிதம் எழுதினார். ஆனால் ஒபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டபடி பொதுக்குழு கண்டிப்பாக நடைபெறும் என்று கூறியதை தொடர்ந்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஒபிஎஸ் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமனறம் பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. சர்ச்சைக்கு நடுவில் ஒபிஎஸ் இபிஎஸ் ஒன்றாக பங்கேற்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் அவர்களை வரவேற்க தொண்டர்கள் காத்திருந்தனர்.
இதனால் வானகரம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே கட்சி பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில். பொதுக்குழுவில் ஒபிஎஸ் தரப்பினர் மற்றும் இபிஎஸ் தரப்பினர் என தனித்தனியே இருப்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டத்திற்கு வந்த பெரும்பாலான உறுப்பினர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஒபிஎஸ்க்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வரும் நிலையில், 2 மாவட்ட செயலாளர்களை தவிர மற்ற உறுப்பினர்கள் யாரும் வருகை பதிவேட்டில் கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் மேடைக்கு வந்துவிட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“