கடந்த சில ஆண்டுகளாக கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஆன்லைனில் மட்டுமன்றி நேரில் ஷாப்பிங் செய்யும்போது கூட கிட்டத்தட்ட அனைவருமே கிரெடிட் கார்டுகளை தான் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிரெடிட் கார்டை மிகச் சரியாக பயன்படுத்தினால் அது ஒரு வரப்பிரசாதம் என்றும், ஆனால் தவறாக பயன்படுத்தினால் அதைப் போல் ஒரு கஷ்டம் கொடுக்கும் விஷயம் எதுவும் இல்லை என்றும் கிரெடிட் கார்டு அனுபவம் குறித்து பலர் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டில் செலுத்த வேண்டிய முழு தொகையையும் செலுத்தாமல் மினிமம் தொகை மட்டும் செலுத்தினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குகிறீர்களா.. வரியை குறைக்கச் சூப்பர் ஐடியா..?!
கிரெடிட் கார்டு
ஒவ்வொரு நபருக்கும் கிரெடிட் கார்டு கொடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட தேதியில் பில் அனுப்பப்படும். அந்த பில் தொகையை செலுத்துவதற்கான கடைசி தேதி உள்பட அனைத்து விவரங்களும் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் முழு தொகையையும் செலுத்த முடியாதவர்கள் மினிமல் தொகையை செலுத்தலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மினிமம் தொகை
கிரெடிட் கார்டு பில்லில் உள்ள முழு தொகையையும் செலுத்தி விட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் மினிமம் தொகையை செலுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு கிரெடிட் கார்டே ஒரு தலைவலியாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.
5% தொகை
கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் நிலுவைத் தொகையில் குறைந்தபட்சம் 5 சதவீதத்தை செலுத்தினால் போதும் என்று குறிப்பிடுவார்கள். எனவே அதில் குறிப்பிட்டபடி 5% மட்டும் செலுத்திவிட்டு அதன் பிறகு பணம் கிடைத்த பிறகு மொத்த தொகையையும் செலுத்தி கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கும்.
வட்டி
மினிமம் தொகையை செலுத்துவதன் மூலம் தாமத கட்டணம் செலுத்துவதை தவிர்க்கலாம் என்றாலும் மினிமம் தொகை செலுத்தினால் அடுத்த பில்லிங் சுழற்சியில் செலுத்தப்பட வேண்டிய தொகை முழுவதும் வட்டியுடன் கணக்கிடப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டியில்லா காலம்
மேலும் நீங்கள் முழுமையாக தொகை செலுத்தாததால் 45 நாட்கள் வரை வட்டி இல்லாத கடன் காலத்தில் நீங்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். முழு தொகையையும் செலுத்தப்படும் வரை நீங்கள் ஒவ்வொரு புதிய பயன்பாட்டிற்கும் வட்டி செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது
ரிசர்வ் வங்கி
இது குறித்து ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு விளக்கமாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச கட்டணத்தை மட்டும் செலுத்தினால் உங்கள் நிலுவையில் உள்ள தொகையில் கூட்டுவட்டி செலுத்துவதுடன் உங்கள் கடன் தொகையும் நீண்டுகொண்டே செல்லும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி முந்தைய மாதம் பில் தொகையில் பாக்கி இருந்தால் அடுத்து வரும் பில்லில் வட்டியில்லா கடன் காலம் நிறுத்தப்படும் என்பதால் அதன் பிறகு நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வட்டியுடன் செலுத்த வேண்டும்
முழு தொகையை செலுத்தும் வரை
எனவே முடிந்தவரை மினிமம் தொகையை செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஒருவேளை மினிமம் தொகையை செலுத்த வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டால் அதன் பின் முழு தொகையை செலுத்தும் வரை புதிதாக கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது
கிரெடிட் கார்டு வேண்டாம்
பொதுவாக பொருளாதார வல்லுநர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டாம் என்றுதான் அறிவுறுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டு இருந்தால் தேவையில்லாத பொருட்களை வீட்டில் வாங்கி வைத்துவிட்டு அதன் பிறகு தேவையில்லாத கடன்களை சுமக்க வேண்டிய நிலை இருக்கும் என்பதுதான் அவர்களது அறிவுரையாகும். ஆனால் அதே நேரத்தில் தேவையான பொருளை ஒருசில குறிப்பிட்ட காலம் மட்டும் வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு பயன்படும். ஆனால் அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது மிகச்சரியாக பில்லிங் தேதிக்கு முன்பே முழு தொகையை செலுத்திவிட்டால் அது உங்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதம் தான்!
Are you paying minimum amount due on your credit cards? Please read this!
Are you paying minimum amount due on your credit cards? Please read this! | கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இதை மட்டும் செய்யாதீங்க: பெரிய சிக்கலாயிடும்!