மராட்டித்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசு இல்லமான வர்ஷாவில் இருந்து காலி செய்தார்.
அரசுக்கு எதிராக 40 எம்.எல்.ஏ.க்கள் போர்க் கொடி தூக்கிய நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் பதவி விலகத் தயார் என உத்தவ் தாக்கரே கூறினார்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் இருந்து பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் உத்தவ் தாக்ரே காலி செய்தார்.
குடும்ப இல்லமான Matoshree-க்கு சென்ற உத்தவ் தாக்ரே மற்றும் குடும்பத்தினருக்கு வழிநெடுக நூற்றுக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.