ரஷ்யாவுக்குப் படையெடுக்கும் இந்திய நிறுவனம்.. விளாடிமிர் புடின் சொன்ன மேட்டர் வேற லெவல்..!

விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா அரசு உலக நாடுகளின் எச்சரிக்கைகளை உதரித்தள்ளி உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் இதுவரை எந்த நாடுகளும் சந்திக்காத வகையில் அதிகப்படியான தடைகளை விதித்து ரஷ்யாவை ஓரம்கட்டியது.

இந்தத் தடை உத்தரவு மூலம் ரஷ்யா மட்டும் அல்லாமல் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டைச் சார்ந்து இருக்கும் அனைத்து நாடுகளும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது.

ஆனால் கடந்த சில வாரங்களாக ரஷ்யாவின் வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் ரஷ்யாவின் நட்பு நாடுகளான இந்தியா மற்றும் சீன நிறுவனங்களுக்கு அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

திடீரென வேகமெடுக்கும் ரஷ்யா – இந்திய வங்கி சேவை.. இதுதான் காரணமா..?!

உக்ரைன் மீதான போர்

உக்ரைன் மீதான போர்

உக்ரைன் மீதான போருக்கு பின்பு இந்தியா, சீனாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் BRICS நாடுகள் உடனான வர்த்தக அளவுகள் அதிகரித்துள்ளது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். புதன்கிழமை நடந்த BRICS விர்ச்சுவல் மாநாட்டைச் சீனா தலைமையேற்று நடத்தியது.

விளாடிமிர் புட்டின்

விளாடிமிர் புட்டின்

இதுபோன்ற கூட்டத்தில் விளாடிமிர் புட்டின் முதல் முறையாகக் கலந்துகொள்வது மட்டும் அல்லாமல் உக்ரைன் மீதான போருக்கு பின்பு ரஷ்ய ஆதரவு நாடுகள் மத்தியில் நடக்கும் முக்கியமான கூட்டம் இது என்பதால் புடின் பங்கேற்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 38 சதவீதம் வளர்ச்சி
 

38 சதவீதம் வளர்ச்சி

இக்கூட்டத்தில் பேசிய புட்டின் நடப்பு ஆண்டின் முதல் 3 மாதத்தில் பிரிக்ஸ் நாடுகள் உடனான ரஷ்யாவின் வர்த்தகம் 38 சதவீதம் அதிகரித்து 45 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

அதை உறுதி செய்யும் வரையில் மத்திய அரசின் தரவுகள் படி இந்தியா அதிகம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் எப்போதும் வளைகுடா நாடுகள் முன்னிலை வகிக்கும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவுக்கு அடுத்து ரஷ்யா 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

ரஷ்ய ஐடி சேவை நிறுவனங்கள்

ரஷ்ய ஐடி சேவை நிறுவனங்கள்

இதேவேளையில் இந்தியாவில் ரஷ்ய ஐடி சேவை நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இதேவேளையில் இந்தியாவின் முன்னணி ரீடைல் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் ரஷ்யாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பிரிக்ஸ் கூட்டத்தில் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

சீனா

சீனா

இது இந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது மட்டும் அல்லாமல் இரு நாடுகள் மத்தியிலான உறவு பெரிய அளவில் மேம்பட உள்ளது. இதேபோல் ரஷ்யா சீனாவை கார், உபகரணம் மற்றும் வன்பொருள் ஆகியவற்றுக்கு நம்பியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

vladimir putin told govt intalks with Indian retail chain stores to expand in Russia

vladimir putin told intalks with Indian retail chain stores to expand in Russia ரஷ்யாவுக்குப் படையெடுக்கும் இந்திய நிறுவனம்.. விளாடிமிர் புடின் சொன்ன மேட்டர் வேற லெவல்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.