திண்டிவனம்: திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய பதிவரை எழுத்தர் சிவஞானவேல் கைது செய்யப்பட்டார். ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு பட்டா தொடர்பான ஆவணங்களை தர பதிவறை எழுத்தர் லஞ்சம் கேட்டார். யுவராஜிடம் ரூ.5000 வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிவஞானவேல் கையும் களவுமாக சிக்கினார்.