பிரித்தானியாவில் கணவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவரின் குழந்தையை மனைவி பெற்றெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிவர்பூல் பகுதியைச் சேர்ந்தவர் லாரன் மெக்ரேகர் (33). இவரின் கணவரான கிரிஸ் மெக்ரெகர் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் brain tumour நோயால் காலமானார்.
மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்து வந்த கிரிஸ் மற்றும் லாரன் தங்களுக்கு ஆசை குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போது, கிரிஸ் உயிரிழந்தார்.
இருப்பினும், கிரிஸ்சின் நினைவாக தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என லாரன் நினைத்து அதற்காக திட்டமிட்டுள்ளார். கணவர் கிரிஸ்சின் உயிரணுவை ஏற்கனவே சேகரித்து வைத்த லாரன், அதை தனது IVF சிகிச்சைக்காக பயன்படுத்தியுள்ளார்.
Caters
கிரிஸ் உயிரிழந்த ஒன்பது மாதத்திற்குப் பின் IVF சிகிச்சை எடுத்துக்கொண்டு, planned C section மகப்பேறு முறையில் ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார் லாரன் மெக்ரேகர்.
தந்தை இறந்து இரண்டு ஆண்டு கழித்து கடந்த மே 17ஆம் திகதி இந்த குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு செப் என பெயர் சூட்டியுள்ளார்.
லாரன் கூறுகையில், நான் செப்வை அவனது அப்பாவின் புகைப்படத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.
ஏனெனில் அவர்கள் ஏற்கனவே ஒருவரையொருவர் அறிந்திருப்பது போல் உணர்ந்தேன்.
என் கணவரின் குழந்தையை பெற்றெடுத்ததில் மகிழ்ச்சி, அவர் எங்களுடன் இருந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது.
கிரிஸின் குழந்தைகளை இன்னும் பெற்று கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
செப்புக்கு 3 அல்லது 4 வயதாகும் போது அது குறித்து முடிவெடுப்பேன் என கூறியுள்ளார்.
Caters