கடலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து 3 உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் இன்று வழக்கம்போல ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உருகுலைந்த நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மேலும், இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன நிலையில், போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.