2022ல் மட்டும் 8,000 கோடீஸ்வரர்களை இழக்கின்றதா இந்தியா? என்ன காரணம்?

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது கோடீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கோடீஸ்வரர்கள் வெளிநாட்டுக்கு நிரந்தரமாக சென்றுவிடுவதால் இந்தியா கோடீஸ்வரர்களை இழந்து கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் வெளிநாட்டுக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஹென்லி குளோபல் சிட்டிசன்ஸ் என்ற ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா கோடீஸ்வரர்களை ஆயிரக்கணக்கில் இழந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்குப் படையெடுக்கும் இந்திய நிறுவனம்.. விளாடிமிர் புடின் சொன்ன மேட்டர் வேற லெவல்..!

கோடீஸ்வரர்களின் வெளியேற்றம்

கோடீஸ்வரர்களின் வெளியேற்றம்

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலுமே கோடீஸ்வரர்கள் வேறு நாட்டுக்கு குடியேறுவது வழக்கமாக இருந்தாலும் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்களை இழந்து வருவதாக ஹென்லி குளோபல் சிட்டிசன்ஸ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடுமையான வரி

கடுமையான வரி

இந்தியாவில் உள்ள கடுமையான வரி உள்பட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பெரிய அளவில் வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

8,000 கோடீஸ்வரர்கள்

8,000 கோடீஸ்வரர்கள்

2022ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 8,000 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 25 ஆயிரம் கோடீஸ்வரர்கள், கடந்த 2020ஆம் ஆண்டு 12,000 கோடீஸ்வரர்களும் இந்தியாவில் இருந்து நிரந்தரமாக வெளியேறி வெளிநாட்டில் குடிபுகுந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடீஸ்வரர்களை இழந்த நாடுகள்
 

கோடீஸ்வரர்களை இழந்த நாடுகள்

இந்தியா மட்டுமின்றி பல நாடுகள் தங்களுடைய கோடீஸ்வரர்களை இழந்து வருகின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா 600 கோடீஸ்வரர்களயும், பிரிட்டன் 1500 கோடீஸ்வரர்களயும், சீனா 10,000 கோடீஸ்வரர்களயும், ரஷ்யா 15,0000 கோடீஸ்வரர்களயும், இழந்துள்ளது.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

அதேபோல் ஹாங்காங் 3,000 கோடீஸ்வரர்களயும், பிரேசில் 2,500 கோடீஸ்வரர்களயும், உக்ரைன் 2800 கோடீஸ்வரர்களயும், மெக்சிகோ மற்றும் இந்தோனேசியா முறையை 800 மற்றும் 600 கோடீஸ்வரர்களயும் இழந்துள்ளது. உக்ரைன் நாடு போர் காரணமாக இந்த ஆண்டு அதிக கோடீஸ்வரர்களை இழந்துள்ளது.

வரிவிதிப்பில் மாற்றம்

வரிவிதிப்பில் மாற்றம்

இந்த ஆண்டில் அதிகபட்சமாக ரஷ்யா சீனாவை அடுத்து இந்தியா 8,000 கோடீஸ்வரர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உருவாகும் கோடீஸ்வரர்கள் இந்தியாவிலேயே இருக்க வேண்டும் என்றால் மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக கடுமையான வரிவிதிப்பை மாற்ற வேண்டும் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எந்த நாட்டுக்கு போகிறார்கள்?

எந்த நாட்டுக்கு போகிறார்கள்?

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேறும் கோடிஸ்வரர்கள் எந்த நாட்டில் அதிகம் குடியேறி இருக்கிறார்கள் என்பது குறித்த தகவலும் அந்த அறிக்கையில் வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டில் கனடாவில் குடிபுகுந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1000 என்றும், போர்ச்சுக்கல் நாட்டில் 1300 என்றும், கிரீஸ் நாட்டில் 1200 என்றும், அரபு நாடுகளில் 4000 என்றும், அமெரிக்காவில் என்றும், சிங்கப்பூரில் 2,800 என்றும், இஸ்ரேல் நாட்டில் 2500 என்றும், ஆஸ்திரேலியாவில் 3500 என்றும், மற்றும் நியூசிலாந்தில் 800 கோடீஸ்வரர்கள் குடிபுகுந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரி விலக்கு

வரி விலக்கு

பெரும்பாலும் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் துபாய், சிங்கப்பூர், ஐரோப்பிய கன்றுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட நாடுகளிலும் குடிபுகுந்து உள்ளனர் என்பது, இந்த நாடுகளில் வரி விலக்கு உள்பட பல்வேறு சலுகைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு இந்தியர்கள்

வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பெரும்பாலும் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சிறந்த வேலை, சமநிலை வாழ்க்கை இருப்பதாகவும், வரி விதிப்பில் எளிமை, பயண வசதி, குழந்தைகளுக்கு தரமான சமநிலை கல்வி ஆகியவை இந்தியாவை விட சிறப்பாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India to Lose 8,000 Millionaires in 2022? Here is why?

India to Lose 8,000 Millionaires in 2022: Here is why? | 2022ல் மட்டும் 8,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா: என்ன காரணம்?

Story first published: Thursday, June 23, 2022, 13:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.