டெல்லி: டிவிட்டர் சமூக ஊடகம் வாயிலாக 2,500 எழுத்துக்கள் கொண்ட தகவலை பகிர்வது தொடர்பாக அந்நிறுவனம் பரிசோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐந்திலந்து, கனடா, கானாவைச் சேர்ந்த சில எழுத்தாளர்களுக்கு புதிய வசதியை அளித்து டிவிட்டர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. டிவிட்டர் அறிமுகமானபோது 140 எழுத்துகளாக இருந்த தகவல் அளவு, 2017ல் 280 எழுத்துகளாக உயர்த்தப்பட்டது.