கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், அவசரகதியில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
விஜய் என்ற இளைஞர் தனது பைக்கில் அகஸ்தீஸ்வரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். முருகன்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வருவதை கவனிக்காமல் அவர் சாலையை கடக்க முயன்ற நிலையில், நாகர்கோவில் நோக்கி அதிவேகமாக சென்ற கார் கண்ணிமைக்கும் நேரத்தில் விஜய்யின் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில், விஜய் பைக்குடன் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.