AIADMK GC meeting Tamil News: அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. முன்னதாக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மனுவை நேற்று இரவு 12:30 மணிக்கு விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதியளித்தனர். ஆனால், வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. அதிகாலை முதலே வானகரம் பகுதி கலைகட்டியது. திருவிழா கூட்டம் போல் கூட்டம் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் திரண்டதால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் நடைபெற்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் வந்தார். பின்னர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.
பொதுக்குழு சார்பில் அதிமுக நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட பொதுக்குழுவில் பேசிய எவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெயரை குறிப்பிடவில்லை.
இதனால், கோபமடைந்து எழுந்த ஓ.பன்னீர் செல்வம் பேச முயன்றபோது அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக வைத்திலிங்கம் மேடையிலே கோஷமிட்டார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளியேறினர். அப்போது ஓ.பன்னீர் செல்வம் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
#ADMK | #ADMKpoliticalCrisis | #AdmkgeneralbodyMeeting pic.twitter.com/5IjQ9MGSSk
— Indian Express Tamil (@IeTamil) June 23, 2022
இப்படி பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது அ.தி.மு.க. பொதுக்குழு இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
#WATCH || “எடப்பாடியார் தான் வேண்டும், ஓ.பி.எஸ் தேவையில்லை ” – அதிமுக முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள்!#ADMKGC | #admkgeneralcouncilmeeting | #AdmkgeneralbodyMeeting | 📹@GokulSubrmaniam pic.twitter.com/k5ixifiX7o
— Indian Express Tamil (@IeTamil) June 23, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil