சென்னை: பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை, கரு.நாகராஜன், சி.டி.ரவி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு பாஜக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு சந்திப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கீரீன்வேஸ் சாலை இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.