புலம்பெயர்ந்தோர் ஒருவர் லண்டனில் கால்வைத்ததுமே மறக்க முடியாத பயங்கர அனுபவம் ஒன்றை சந்தித்துள்ளார்.
போலந்து நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவரான Kamil Sobala (31) என்பவர், ரயில் ஒன்றிலிருந்து இறங்கி அருகில் நின்றுகொண்டிருந்த சிலரிடம், தான் செல்லவேண்டிய இடத்துக்கு வழி கேட்டிருக்கிறார்.
உடனே, நீ எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறாய்? என்று கேட்டிருக்கிறார்கள் அவர்கள். அதற்கு Kamil, தான் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என்று கூற, உடனே அவரை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள் அவர்கள்.
தாக்குதலில் காயமடைந்த Kamil மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார்.
அந்த எதிர்பாராத சம்பவத்தால் தான் ஆடிப்போனதாகத் தெரிவிக்கும் Kamil, இப்போது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைக்குச் செல்லக்கூட பயப்படுகிறார்.
Kamil தாக்கப்பட்ட தகவலறிந்த பொலிசார், தாக்கியவர்களைத் தேடி வருகிறார்கள்.
போலந்து நாட்டவர்கள் பிரித்தானியாவில் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல, 2016ஆம் ஆண்டிலும் இதேபோல் போலந்து நாட்டவர்கள் சிலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.