#BigBreaking || வெளியான செய்தியால் பெரும் சோகத்தில் மூழ்கிய ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை.! 

எம்.புதூர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“கடலூர் மாவட்டம், எம். புதூர் பகுதியில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வந்துள்ள செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 

மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய நிவாரண உதவியை வழங்கவும், அடிக்கடி நடைபெறும் பட்டாசு விபத்தினைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.:

இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.