சினிமா எளிதில் மக்களை சென்றடையயும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய ஊடகம். இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதற்கு துணையாக சினிமாவை எடுத்துக்கொள்கின்றனர். அந்த அளவிற்கு சினிமாவின் மீதான எதிர்பார்ப்பு ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் ரசிகர்களின் ரசனை மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்து வந்த வெள்ளிவிழா என்ற வார்த்தை 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டது. இப்போது ஒரு படத்தின் வெற்றி தோல்வி ஒரு வாரத்தில் தீர்மானிக்கப்பட்டு விடுகினறன. படம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் அது வெற்றிப்படமாகவும், பிடிக்கவில்லை என்றால் தோல்விப்படம் என்றும் யூகித்துவிடுகின்றனர்.
அதேபோல் எந்த படம் அதிக வசூல் சாதனை படைக்கிறது என்பதில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில் முன்னணி நடிகர்களின் பல படங்கள் சாதாரணமாக பாக்ஸ்ஆபீஸில் 100 கோடி வசூலை குவித்துவிடுவதால் இப்போது அற்கு அதிகமாக யார் படம வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில
அந்த வகையில் தமிழ் சினிமாவில் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த படங்கள் எவை தெரியுமா?
எந்திரன்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன்.ரஜினி ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். எந்திரன் இந்திய அளவில் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
கபாலி
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் பா.ரஞ்சித் முதல் முறையாக இணைந்த இந்த படம் சிறுவயதில் தொலைத்த தனது மனைவி மற்றும் மகளை தேடிபோகும் ஒரு பாசமான அப்பாவின் நிலையை பற்றி கதை. ராதிகா ஆப்தே. தன்ஷிகா நாசர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 2016-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
2.0
எந்திரன் படத்தின் 2-ம் பாகமாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தி் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
விக்ரம்
கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான விக்ரம் படம் மூலம் தான் ஒரு பாக்ஸ்ஆபீஸ் கிங் என்பதை கமல் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கமல்ஹாசன். பக்த்பாசில். விஜய் சேதுபதி நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் லோகஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். தற்போதுவரை விக்ரம் படம் 350 கோடிக்குமேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும நாட்களில் விக்ரம் மேலும் வசூல் சாதனை படைக்க உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“