உதகை அருகே புலியை துரத்திய செந்நாய்கள் கூட்டத்தின் வீடியோ, இணையத்தில் வைரலாகி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது யானை, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகி வருகிறது. இப்படி உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தியும் வருகிறது.
இதையும் படிங்க… விக்கிபீடியாவிற்கு பணம் செலுத்தும் கூகுள் நிறுவனம்! எதற்காக?
இதில் சமீபத்தில் நீலகிரியில் உதகை அருகே உள்ள மார்லிமந்து என்னும் ஏரிக்கு அருகே செந்நாய் கூட்டம் ஒன்று புலியை துரத்தியுள்ளது. கூட்டமாக வந்த செந்நாய்களை கண்டு புலி அச்சத்தோடு அருகே உள்ள புதர் பகுதியில் சென்று மறைந்துள்ளது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் முகாமிட்டு புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். புலி மற்றும் செந்நாய்கள் வீடியோவால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM