சத்தியமங்கலம் கோவைச் சாலையில் யானைக் கூட்டம் புதிதாகப் பிறந்த குட்டியை மிகுந்த பாதுகாப்புடன் சாலையில் அழைத்துச் செல்லும் காட்சியை இந்திய வனப்பணி அதிகாரி சுசந்தா நந்தா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
புதிதாகப் பிறந்த குட்டி நடுவில் வர முன்னும் பின்னும் சுற்றிலும் யானைகள் அணிவகுத்து இசட் பிளஸ் பிளஸ் பிளஸ் பாதுகாப்புடன் அதை அழைத்துச் செல்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.