பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவின் சிடி ரவி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.
மேலும், இந்த சந்திப்பின்போது அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்தும் விவாதம், ஆலோசனை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி சந்தித்த அண்ணாமலை, அடுத்ததாக தற்போது பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்திக்க சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இந்த சந்திப்புக்குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில்,
“இந்த சந்திப்பு தேசிய அளவிலான கூட்டணி சம்பந்தமான சந்திப்பாகும். பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அண்ணாமலை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.
அதிமுகவின் கட்சி விவகாரங்களில் பாஜக என்றுமே தலையிட்டது கிடையாது. பொதுக்குழுவில் ஒட்டுமொத்தமான உறுப்பினர்களின் விருப்பமானது ஒற்றை தலைமை வேண்டும் என்பது. அந்த ஒற்றை தலைமை எடப்பாடி கே பழனிசாமி தான் வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் விரும்புகின்றனர்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.