சமூக வலைதளங்களில் புல்டோசர் கொண்டு பைக்குகள் நசுக்கப்படுவது போன்ற காட்சிகள் வைரலாகப் பரவி வருகினறன. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஏலம் விட்டுகூட கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நியூயார்க்கில் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புல்டோசர் மூலம் நசுக்கப்பட்டுள்ளன.
காரணம் என்னவென்றால் தெருக்களில் உலவி அச்சுறுத்தும் வாகனங்களை ஒழிப்பதில் உறுதியாக இருப்பதாக அந்நாட்டு மேயர் எரிக் ஆடம்ஸ் கூறி இருக்கிறார். புல்டோசரால் வாகனங்கள் நசுக்கப்படுவதை அந்நாட்டின் மேயர் எரிக் ஆடம்ஸ் கொடியசைத்துத் தொடங்கியும் வைத்துள்ளார்.
வாகனங்கள் பதிவுசெய்யப்படும் போது, அதன் வடிவமைப்பு உள்ளிட்டவையும் பதிவுசெய்யபடும். வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யும்போது உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டியது அவசியம். அப்படி செய்யாத பட்சத்தில் அவை சட்டம் புறம்பாகத் தயாரிக்கப்பட்டதாக கணக்கில்கொள்ளப்படும்.
சட்டத்திற்கு புறம்பாகத் தயாரிக்கப்பட்ட இந்த இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என தெரிவித்த மேயர் ஆடம்ஸ், இந்த இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுவது கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டில் அதிகரித்திருப்பதாக இருப்பதாகக்கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் வாகனங்களில் முதற்கட்டமாக 100 வாகனங்கள் மட்டுமே புல்டோசர் மூலம் அழிக்கப்படுவதாகவும், அழிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களின் கழிவுகள் அனைத்தும் பழைய உலோகங்களாக மாற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.