முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உலக உணவுத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் R5n செயற்திட்டப் பயனாளிகளுக்கு கோழி வளர்ப்புக்கான உதவிப்பொருட்கள் நேற்று (22) வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு துணுக்காயில் உலக உணவுத் திட்டத்தின் R5n திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழி வளர்ப்புக்கான உதவித் திட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
இதன்போது நாட்டுக்கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு தலா 30 கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழிக்குஞ்சுகளுக்கான உணவு, பாத்திரங்களும் வழங்கப்பட்டன.