வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற புதிய விதிமுறைகள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-‘வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர், அந்த வாடகை தாயின் பெயரில் மூன்று ஆண்டுகளுக்கான மருத்துவ காப்பீடு கட்டாயம் எடுத்துக் கொடுக்க வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

latest tamil news

பாதிப்பு


கடந்த ஜனவரியில், வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறைக்கு வந்தது.இந்நிலையில், வாடகை தாயை அமர்த்தும் தம்பதியர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அதன் விபரம்:கர்ப்பப்பை அகற்றப்பட்டு இருத்தல், கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது வேறு விதமான நோய் பாதிப்புகள், கருத்தரிப்பதால் உயிருக்கு ஆபத்து விளைக்க கூடிய நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே வாடகை தாய் உதவியுடன் குழந்தை பெற முடியும்.வாடகை தாயாக நியமிக்கும் பெண்ணின் கர்ப்பப்பையில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே கருமுட்டைகளை செலுத்த வேண்டும்.

latest tamil news

மருத்துவ செலவு

வாடகை தாய் கருவுற்று குழந்தை பெற்றுத்தரும் காலகட்டத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள், கருத்தரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.உயிரிழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு தர ஒப்புக் கொண்டு சம்பந்தப்பட்ட தம்பதியர் அல்லது பெண், நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.குழந்தை பேறுக்கு பிறகான உடல்நல குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற வசதியாக, மூன்று ஆண்டுகளுக்கான முழுமையான மருத்துவ காப்பீட்டை, வாடகை தாயின் பெயரில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர் எடுத்து தர வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.