ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள சிவன் கோவிலில் பணம் திருடிய நபர் ஒருவர், மன்னிப்பு கேட்டு மீண்டும் உண்டியலில் போட்டுள்ள விநோதம் நடந்துள்ளது.
கடந்த 14 ஆம் தேதி பௌர்ணமி தினத்தன்று தாம் இந்த பணத்தை கோவிலில் இருந்து திருடியதாகவும், ஆனால் அதன்பிறகு தனது குடும்பத்திற்கு பல்வேறு இன்னல்கள் நேர்ந்ததாகவும் தனது மன்னிப்பு கடிதத்தில் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
உண்டியலை வழக்கம் போல் திறந்து எண்ணிய போது இந்த மன்னிப்பு கோரும் கடிதத்தையும், அதனுடன் 10 ஆயிரம் ரூபாயையும் கோவில் ஊழியர்கள் கண்டெடுத்தனர்.