ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம்: இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் கோடீஸ்வரர்தான்!

இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தற்போது தாராளமாக சம்பளம் வாங்கி வருகிறார்கள் என்றும் அதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் ஐடிசி நிறுவனத்தில் பணிபுரியும் 220 ஊழியர்கள் கடந்த நிதியாண்டில் ஒரு கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வெளியான ஆண்டறிக்கையில் ஐடிசி நிறுவனத்தில் 44 சதவீத ஊழியர்கள் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்களாக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.11.2 கோடி சம்பளமா.. சராசரியே இப்படின்னா ரியல் சம்பளம் எவ்வளவு.. இந்திய CEO-களுக்கு ஜாக்பாட்!

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம்

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம்

2021 – 22 நிதியாண்டின் அறிக்கையின்படி ஐடிசி நிறுவனத்தில் பணிபுரியும் 220 ஊழியர்கள் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 150 ஆக இருந்த நிலையில் தற்போது அது 220 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் ரூ.8.50 லட்சம்

மாத சம்பளம் ரூ.8.50 லட்சம்

ஐடிசி நிறுவனத்தில் பணியாற்றும் 220 ஊழியர்கள் மாதம் ஒன்றுக்கு 8.50 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலும் ஊதியம் பெறுபவர்கள் ஆக உள்ளனர் என்றும் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவ் பூரி சம்பளம்
 

சஞ்சீவ் பூரி சம்பளம்

ஐடிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் பூரி அவர்களின் ஊதியம் 5.35 சதவீதம் அதிகரித்து ரூ. 12.59 கோடியாக உள்ளது. இதில் ரூ. 2.64 கோடி ஒருங்கிணைந்த சம்பளம், ரூ. 49.63 லட்சம் பிற நன்மைகள், ரூ. 7.52 கோடி செயல்திறன் போனஸ் என வழங்கப்படுகிறது. அதேபோல் ஐடிசியின் செயல் இயக்குநர் பி சுமந்த் அவர்களின் சம்பளம் ரூ. 5.76 கோடி மற்றும் ஆர் டாண்டன் அவர்களின் சம்பளம் ரூ 5.60 கோடி என வழங்கப்படுகிறது.

மொத்த ஊழியர்கள்

மொத்த ஊழியர்கள்

2022 ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி ஐடிசியின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 23,829 ஆக இருந்தது என்றும் இது கடந்த ஆண்டை விட சுமார் 8.4 சதவீதம் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்-பெண் ஊழியர்களின் எண்ணிக்கை

ஆண்-பெண் ஊழியர்களின் எண்ணிக்கை

ஐடிசி நிறுவனத்தைப் பொறுத்தவரை 21,568 ஆண் ஊழியர்கள், 2,261 பெண் ஊழியர்கள் உள்ளனர் என்பதும் நிரந்தர ஊழியர்கள் தவிர 25,513 பணியாளர்களும் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். 2021 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ஐடிசி ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 26,017 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சராசரி சம்பளம் அதிகரிப்பு

சராசரி சம்பளம் அதிகரிப்பு

2022ஆம் ஆண்டு காலாண்டு நிதியாண்டில் ஐடிசி ஊழியர்களின் சராசரி சம்பளம் 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் முக்கிய நிர்வாகப் பணியாளர்களின் சராசரி சம்பளம் 8 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஐடிசியின் வருமானம்

ஐடிசியின் வருமானம்

மேலும் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் ஐடிசியின் மொத்த வருவாய் ரூ.59,101 கோடியாக இருந்தது என்றும், இந்த வருவாய் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.48,151.24 கோடியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

220 employees earn more than Rs 1 crore in this indian company

220 employees earn more than Rs 1 crore in this indian company | ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம்: இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் கோடீஸ்வரர்தான்

Story first published: Thursday, June 23, 2022, 9:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.