உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் புதிய வகை ரோபோ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதனை அடுத்து அந்நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளதாக கருதப்படுகிறது.
இ-காமர்ஸ் மற்றும் மின்னணு வர்த்தகத்தில் தலைசிறந்து விளங்கும் அமேசான் அறிமுகம் செய்யும் இந்த ரோபோ சுயமாக இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
அமேசான் நிறுவனத்தின் பொருட்களை அனுப்பி வைக்கும் பிரிவில் இந்த ரோபோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கூகுள், அமேசான், பேஸ்புக் ஆகியவை அச்சுறுத்தல் தரும் நிறுவனங்கள்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
புதிய வகை ரோபோ
பேட்டரியால் இயங்கும் இந்த புதிய வகை ரோபோக்கள் சார்ஜ் குறைந்தால் தானாகவே சென்று மின் இணைப்பில் பொருத்தி தானாகவே சார்ஜ் ஏற்றிக் கொள்கின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமேசான்
அமேசான் நிறுவனம் வித்தியாசமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த வகையில் அமேசான் தனது கிடங்குகள் முழுவதிலும் பணி புரிவதற்காக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இருந்தாலும் தற்போது முழுக்க முழுக்க தானாகவே இயங்கும் ரோபோ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
புரோட்டியஸ்
புரோட்டியஸ் என்று அழைக்கப்படும் இந்த ரோபோ இதற்கு முன் பயன்படுத்தப்பட்ட ரோபோக்களை விட வித்தியாசமாகவும், பாதுகாப்பாகவும், அதிக தொழில்நுட்பம் உடையதாகவும் இருக்கும் என அமேசான் கூறியுள்ளது.
மேம்பட்ட பாதுகாப்பு
புரோட்டியஸ் ரோபோ மேம்பட்ட பாதுகாப்புடன் அருகில் உள்ள பொருட்களை உணர்தல் மற்றும் வழி நடத்தல் ஆகிய தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவதாக அமேசான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக எடைகளை தூக்கும்
ஏற்கனவே பல ரோபோ அமைப்புகளை அமேசான் பயன்படுத்தி வந்தாலும், அந்த ரோபோக்களை விட தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புரோடியஸ் ரோபோ அதிக எடைகளை தூக்கக்கூடிய திறன் உடையது என அமேசான் கூறியுள்ளது.
காயம்
தொழிலாளர்கள் கடினமான பொருட்களை தூக்குவது மற்றும் நகர்த்தும் வேலையை இனி இந்த ரோபோ மிக எளிதாக செய்யும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் காயம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.
புதிய ஸ்கேனிங் சிஸ்டம்
இந்த ரோபோவில் புதிய ஸ்கேனிங் சிஸ்டம் உள்ளதால் எவ்வளவு தூரம் நகர வேண்டும், எந்த பொருளை எப்படி கையாள வேண்டும், பாதுகாப்பாக நகர்த்துவது எப்படி என்பது உள்பட அனைத்து தொழில்நுட்பங்களையும் கையாளும் திறன் கொண்டது. இதனால் ஊழியர்கள் மற்றும் பொருட்களின் பாதுகாப்பு அதிகரித்திருப்பதாக அமேசான் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனகச்சிதம்
சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெரிய வடிவத்தில் காணப்படும் இந்த ரோபோக்கள் பொருள்கள் எவ்வளவு உயரத்தில் அடுக்கப்பட்டு இருந்தாலும் அந்த பொருட்களை வெளியில் கொண்டுவருவது உள்பட அனைத்து பணிகளையும் கனகச்சிதமாக செய்வதாகவும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
Amazon announces fully autonomous mobile warehouse robot
Amazon announces fully autonomous mobile warehouse robot | இனி எல்லாமே ரோபோ தான்… அமேசானின் அறிமுகம்…!