கிரிக்கெட்டில் எப்படி வேண்டுமானாலும் விக்கெட் விழும் என்பது இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. போட்டியில் ஹென்றி நிகோலஸ் அவுட் ஆன விதம் தான் சுவாரஸ்யமான ஒன்று.
ஹென்றி நிகோலஸ் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்த போது ஜேக் லீச் பந்து வீசினார். அப்போது, நிகோலஸ் நேராக அடித்த பந்து, எதிரே நின்று கொண்டிருந்த மற்றொரு பேட்ஸ்மேன் டேரில் மிட்செலின் பேட்டில் பட்டது.
மிட்செல் பேட்டில் பட்டு வந்த பந்தை அலெக்ஸ் லீஸ் கேட்ச் பிடித்தார். இதனால் நிகோலஸ் அவுட் ஆகி வெளியேறினார். பந்து வீசிய லீச்சிற்கு என்ன நடந்தது என்றே புரிந்து கொள்ள முடியவில்லை.
அதற்கும் எல்லாம் நடந்து முடிந்து அவுட் ஆகி நிகோலஸ் வெளியேறிவிட்டார். கிரிக்கெட் வித்தியாசமான முறையில் அவுட் விழும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இது மிக மிக வித்தியாசம் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
What on earth!? 😅🙈
Scorecard/clips: https://t.co/AIVHwaRwQv
🏴 #ENGvNZ 🇳🇿 pic.twitter.com/yb41LrnDr9
— England Cricket (@englandcricket) June 23, 2022
newstm.in