கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினமும் 771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 500 பேர் வரை புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், நேற்று யாரும் கொரோனா தொற்றுக்கு பலியாகவில்லை.
இந்நிலையில், பொதுத்துறை அரசு துணை செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சில மாவட்டங்களில் தொற்று கணிசமாக அதிகரித்து வருவதாலும், கொரோனா தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதால், அனைத்து அலுவலர்களும் இன்று முதல் கட்டாயம் முக கவசம் அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும்.
சுத்தம் மற்றும் சுகாதாரம் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். இதன்படி, தலைமை செயலக ஊழியர்கள் இன்று முதல் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.