பொது இடங்களில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அமெரிக்கர்களுக்கு உரிமை உண்டு என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை எழுச்சியடைந்து, மாநிலங்களும் நகரங்களும் குறைச்சம்பவங்களுக்கு எதிராக போராடி வரும் நிலையில், இப்போது நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
அதாவது, பொது இடங்களில் கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கு அமெரிக்கர்களுக்கு அடிப்படை உரிமை உண்டு என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நூற்றாண்டிற்கும் மேலாக இருக்கும் நியூயார்க் சட்டத்தின்படி, ஒரு நபர் தங்களுக்கு சட்டபூர்வமான தற்காப்புத் தேவை அல்லது சரியான காரணம் இருப்பதாக நிரூபித்தால், வீட்டிற்கு வெளியே பொது இடங்களில் கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைப் பெறலாம்.
கலிஃபோர்னியா உட்பட பல அமெரிக்க மாநிலங்களும் இதே போன்ற சட்டங்களைக் கொண்டுள்ளன.
இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பொது இடங்களில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்தும் திறனைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு அமைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியும், ஜனநாயகக் கட்சித் தலைவருமான ஜோ பைடன் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “இது பொது அறிவு மற்றும் அரசியலமைப்பு இரண்டிற்கும் முரணானது, மேலும் நம் அனைவரையும் ஆழமாக தொந்தரவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்திய இளைஞர் மர்ம மரணம்: கண்ணீருடன் தந்தை வைத்த வேண்டுகோள்!
மேலும், சக அமெரிக்கர்களைப் பாதுகாக்க குறைந்த பட்சம் ஏதேனும் செய்யவேண்டும் என்று கூறிய பைடன், “துப்பாக்கி பாதுகாப்பு குறித்து தங்கள் குரல் கொடுக்க நாடு முழுவதும் உள்ள அமெரிக்கர்களை நான் அழைக்கிறேன்” என்றார்.
அமெரிக்க மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஏற்கனவே அனுமதியின்றி துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை கடந்த தசாப்தத்தில் மட்டுமே அவ்வாறு செய்கின்றன.
இதையும் படிங்க: இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டனின் முதல் உருவப்படம் வெளியீடு!
1913-ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட நியூயார்க் மாநில சட்டம், தனிப்பட்ட மாநிலங்களுக்கு துப்பாக்கி பயன்பாடு மற்றும் உரிமையை கட்டுப்படுத்தும் உரிமை உள்ளது என்ற கூறுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களில், 200 மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் அமெரிக்க சந்தையில் விற்கப்பட்டுள்ளன. அதில் தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் தனிப்பட்ட கைத்துப்பாக்கிகள் என அனைத்து வகை துப்பாக்கிகளும் அடங்கும். இதுவே நாட்டில் நடக்கும் கொலைகள், வெகுஜன துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைகளின் எழுச்சிக்கு .