மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தில் உள்ள அதிருப்தி எம்எல்ஏகளுக்காக ஸ்டார் ஹோட்டலில் 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணியாக தேர்தலை சந்தித்தன.
ஆனால் தேர்தலுக்குப் பின்னர் 56 எம்.எல்.ஏக்களை கொண்ட சிவசேனா, 106 எம்.எல்.ஏக்கள் கொண்ட பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் ஒருசில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.
அரசியல் நெருக்கடி
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது திடீரென சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளதாக தெரிகிறது.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 40 பேர் தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களுக்காக இலட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவுகாத்தி
முதல்கட்டமாக அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் மற்றொரு பாஜக ஆளும் மாநிலமான அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தற்போது தங்கியுள்ளனர்.
ரேடிசன் ப்ளு
கவுகாத்தியில் உள்ள ரேடிசன் ப்ளு என்ற ஸ்டார் ஹோட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுகாக ஏழு நாட்களுக்கு 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறையில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வாடகை என்றால் 7 நாட்களுக்கு ரூ.56 லட்சம் செலவாகும்.
70 அறைகள்
இதேபோல் இந்த ஓட்டலில் 70 அறைகளை 7 நாட்களுக்கு எம்எல்ஏக்கள் சார்பில் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி என்றால் 70 x 56 லட்சம் ரூபாய் எவ்வளவு என்பதை நீங்களே கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள். இதுபோக உணவு உள்பட மற்ற செலவுகள் தனி என்பது குறிப்பிடத்தக்கது.
196 அறைகள்
கவுகாத்தியில் உள்ள ரேடிசன் ப்ளு ஹோட்டலில் மொத்தம் 196 அறைகள் உள்ள நிலையில் 70 அறைகள் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளதால் இந்த ஹோட்டலில் தற்போது அறைகள் எதுவும் காலி இல்லை என்று கூறப்படுகிறது.
உணவு
மேலும் ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் தவிர வெளியில் இருந்து வரும் பிற வாடிக்கையாளர்களுக்கு உணவு சேவையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
40 எம்.எல்.ஏக்கள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சுயேச்சைகள் உள்பட மொத்தம் 40 எம்எல்ஏக்கள் கவுகாத்தியில் முகாம் இட்டிருப்பதாகவும், சிவசேனா கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இவர்கள் தற்போது இருப்பதாகவும் கூறப்படுகிறது.
70 Rooms in Guwahati star hotel for Maharastra MLAs, what are the cost
70 Rooms in Guwahati star hotel for Maharastra MLAs, what are the cost | 5 ஸ்டார் ஹோட்டலில் மகாராஷ்டிரா எம்.எல்.ஏக்கள்… எத்தனை லட்சம் செலவு தெரியுமா?