சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பண்டிகைக் காலத்தில் தொடக்கத்தினை குறிக்கும் தசரா வரையிலான வாரங்களில், ஹைத்ராபாத்தினை தலைமையிடமாக கொண்ட மொபைல் போன் கவர் தயாரிக்கும் நிறுவனமான ட்வீக்கிமோட்டின் உரிமையாளர் ராகவேந்தர் குப்தா, அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் வெளியேற்றத்தினை கண்டதாக கூறியுள்ளார்.
இது அவரது நிறுவனத்தில் இருந்து அதிக உற்பத்தி ஆர்டர்கள் மற்றும் ஏற்கனவே எடுத்த ஆர்டர்கள் நிலுவையில் இருக்கும் நேரத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சமயத்தில் பெண் தொழிலாளர் குழுக்கள் இப்பிரச்சனைகளை களைய தயாராக இருந்தனர் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். அதன் பிறகு சில நாட்களில் அந்த பிரச்சனையை சரி செய்ய முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
2022ல் மட்டும் 8,000 கோடீஸ்வரர்களை இழக்கின்றதா இந்தியா? என்ன காரணம்?
பெண்கள் அதிகம்
இதற்கிடையில் தற்போது தங்கள் பணியமர்த்தலில் அதிக பெண்களை பணியமர்த்துவேன் என தனக்கு தானே உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எங்கள் மக்களில் 60% அதிகமானோர் பெண்கள். டே ஷிப்டில் இந்த எண்ணிகை 80% அதிகரித்துள்ளது எனவும் குப்தா தெரிவித்துள்ளார்.
எம் எஸ் எம் இ-க்கள் ஆர்வம்
இது ட்வீக்கிமோட்டில் மட்டும் அல்ல, இந்தியாவில் அதிகரித்து வரும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நிலவி வரும் பற்றாக்குறைக்கு மத்தியில் திறமையான பெண்களை பணியமர்த்தில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.
அதிக பெண்கள் பணியமர்த்தல்
கொரோனாவின் வருகைக்கு பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த நகரங்களுக்கு திரும்பிவிட்டனர். இதனால் பல துறைகளில் தொழிலாளர்களுக்காக பற்றாக்குறை நிலவி வருகின்றன. கொரோனாவினால் சென்ற ஊழியர்கள் பலர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. பலரும் சொந்த தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் பல நிறுவனங்களும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்த ஆரம்பித்துள்ளன.
அதிக பெண்கள் ஏன் தெரியுமா?
டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி, மூன்று எம் எஸ் எம் இ நிறுவனங்களில், 2 நிறுவனங்கள் அதிக பெண்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. இதுமட்டும் அல்ல இன்னும் பல தரமான காரணங்கள் பெண்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளன. பெண்கள் அதிக நேரம் விடா முயற்சியுடன் பணி புரிகின்றனர். அதிக நேரம் வேலை செய்கிறார்கள். ஊழியர்களுடன் இணைந்து சிறப்பாக பணிபுரிகின்றனர் எம் எஸ் எம் இ உரிமையாளார்கள் தெரிவித்துள்ளனர்.
good news! Small companies that hire more female employees due to staff shortages
The growing small and medium enterprises in India are showing keen interest in hiring talented women amid the prevailing shortage.