தன் மரணத்தை முன்கூட்டியே கணித்த அழகிய இளம்பெண்: சூட்கேஸுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சோகம்


ரஷ்யாவில் சூட்கேஸ் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஒரு அழகிய இளம்பெண், முன்கூட்டியே தன் மரணத்தைக் கணித்துள்ளதைக் காட்டும் வீடியோ ஒன்று சிக்கியுள்ளது.

மொடல் அழகியான Gretta Vedler (23) என்ற இளம்பெண், மாஸ்கோவிலுள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் திடீரென மாயமானார்.

உயர்குடி பாலியல் தொழிலாளியாக இருந்த Gretta, பாலி தீவுக்குச் சென்று ஒரு புதிய வாழ்வைத் துவங்கலாம் என்று திட்டமிட்டிருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாயமானார்.

ஓராண்டிற்குப் பிறகு, மாஸ்கோவிலிருந்து 250 மைல் தொலைவில் அமைந்துள்ள, Lipetsk என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டின் பொருட்கள் போட்டு வைக்கும் கிடங்கு ஒன்றிற்குள் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் இருந்த சூட்கேஸுக்குள் Grettaவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், தன் மரணத்தை முன்கூட்டியே எதிர்பார்த்த Gretta வெளியிட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் கிடைத்துள்ளது. அந்த வீடியோவை Gretta தான் தங்கியிருந்த ஹொட்டல் அறையிலிருந்து பதிவு செய்துள்ளார்.

அதில், நான் ஹொட்டல் எண் 708இல் இருந்து பேசுகிறேன். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது, நான் அலறி சத்தமிட்டேன், ஆனால், யாரும் எனக்கு உதவிக்கு வரவில்லை.

எதனால் இது நடந்தது? எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதற்குப் பிறகு உங்களுக்கே எல்லாம் தெரியவரும் என்று கூறும் Gretta, தன்னைக் கொலை செய்யப்போவது தன் காதலரான Dmitry Korovinதான் என்று கூறுகிறார்.

தன் மரணத்தை முன்கூட்டியே கணித்த அழகிய இளம்பெண்: சூட்கேஸுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சோகம்

Dmitryயை பொலிசார் கைது செய்தபோது, தனக்கும் Grettaவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தான் அவரைத் தாக்கி கழுத்தை நெறித்ததாகவும், அவர் மயங்கிக் கீழே விழ, தான் ஹொட்டல் அறையை விட்டு வெளியே சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், தான் திரும்ப ஹொட்டல் அறைக்கு வந்தபோது Gretta இறந்து கிடந்ததாகவும், அவரது உடலை ஒரு சூட்கேஸுக்குள் வைத்து, துர்நாற்றம் வெளிவராத வகையில் நிலக்கரியையும் உடலுடன் வைத்து, அதை தன் பெற்றோர் வீட்டிலுள்ள கிடங்கு ஒன்றிற்குள் வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் Dmitry.

தன் மரணத்தை முன்கூட்டியே கணித்த அழகிய இளம்பெண்: சூட்கேஸுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சோகம்

Dmitry பொலிசாரால் கைது செய்யப்பட்டபோது, தன் காதலியை ஒரு நாயைப் போல காட்டுக்குள் கொண்டு புதைக்க தனக்கு மனமில்லை என்றும், தாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியவர்கள் என்பதால் தன்னால் அப்படி புதைக்கமுடியவில்லை என்றும் கூறினார்.

Gretta ஒரு பாலியல் தொழிலாளியாக வேலை செய்தது Dmitryக்கு தெரிந்துன் அவருடன் பழகியிருக்கிறார். அவரிடம் நிறைய பணமும் கடன் வாங்கியிருக்கிறார் Dmitry. ஆனால், ஒரு கட்டத்தில் குடிபோதையிலிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டிருகிறது.

நடந்த சண்டையில் Gretta கொல்லப்பட, அவரது புதுவாழ்வைத் துவங்கும் கனவு பலிக்காமலே அவர் வாழ்வு முடிந்துவிட்டது. Dmitry தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
 

தன் மரணத்தை முன்கூட்டியே கணித்த அழகிய இளம்பெண்: சூட்கேஸுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சோகம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.