எம்.எஸ்.விஸ்வநாதன் :
பழம்பெரும் இசையமைப்பாளரான திரை இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் 1928ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். இவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.
1953ஆம் ஆண்டு வெளிவந்த ஜெனோவா திரைப்படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசையமைத்துள்ளார்.
கலைமாமணி, இசைப்பேரறிஞர் விருது, ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை தொட்ட மெல்லிசை மன்னர் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.