தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானத்தின் விற்பனை 6 சதவிகிதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மதுபான விற்பனையிலிருந்து அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுபானத்தின் விலை சற்று உயர்த்தப்பட்டதிலிருந்து விற்பனை குறைதுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 4 முதல் 6 % வரை மதுமான விற்பனை குறைந்துள்ளது.
மீடியம் வகை மதுபானத்தை அதிகம் வாங்கிய மதுப்பிரியர்கள் தற்போது விலை உயர்வால், சாதாரண வகை மதுபானத்திற்கு மாறிவிட்டனர். மீடியம் வகை மதுபானத்தின் விலை 20 இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சாதரண வகை மதுபானத்தின் விலை சற்று குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக மதுபான தயாரிக்கும் உரிமையாளர்கள் கூடுதல் லாபத்திற்காக ப்ரீமியர் வகை மதுபானம் மற்றும் மீடியம் வகை மதுபானத்தை மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.
இதனால் சாதாரண வகை மதுபானத்தின் கையிலிருப்பு குறைந்துவிடுகிறது. டாஸ்மாக் கடைகளில் பொதுவாக ப்ரீமியர் வகை மதுபானத்தின் விற்பனை 60 % ஆக இருக்கிறது. ஆனால் மீடியம் மற்றும் சாதாரண வகை மதுபானத்தின் விற்பனை 80% ஆக இருக்கிறது.
கடந்த புதன்கிழமை தெற்கு சென்னை பகுதியில் உள்ள 83 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர் கலந்துகொண்ட கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமை வகித்ததாக கூறப்படுகிறது. மே மாதத்தில் மதுபான விற்பனை குறைந்ததை குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.