இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் இறுதி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று(24) நடைபெறவுள்ளது.
ஏற்கனவே தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்து விட்ட ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்குகிறது.
அவுஸ்திரேலிய துடுப்பட்ட வீரர் டிராவிஸ் ஹெட் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.