300 பேரை மீண்டும் வீட்டுக்கு அனுப்பிய நெட்பிளிக்ஸ்.. கண்ணீர் விடும் ஊழியர்கள்.. ஏன்?

சர்வதேச அளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்று நெட்பிளிக்ஸ். இதில் மக்களுக்கு பிடித்தமான வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள், கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள், குறிப்பாக புதிய திரைப்படங்கள் எனபவும் ஒளிப்பரப்படுவதால், மக்கள் மிகவும் விரும்பும் தளங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. எனினும் சமீபத்திய மாதங்களாக அதன் சந்தாதாரர்கள் அதிகளவில் வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில் தான் தனது வணிகத்தினை மறுசீரமைக்கும் பொருட்டு நெட்பிளிக்ஸ் நிறுவனம் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த மே மாதம் சுமார் 150 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதுவே ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை கொடுத்த நிலையில், தற்போது அடுத்த சுற்று பணி நீக்கம் வந்துள்ளது.

150 பேரை பணிநீக்கம் செய்த நெட்பிளிக்ஸ்.. அதிர்ச்சியில் இருக்கும் ஊழியர்கள்.. இதுதான் காரணம்..!!

மீண்டும் பணி நீக்கம்

மீண்டும் பணி நீக்கம்

கடந்த மாதம் செய்யப்பட்ட பணி நீக்கத்தினை விட இந்த முறை இருமடங்கு அதிகரித்து, 300 பேரினை பணி நீக்கம் செய்துள்ளது நெட்பிளிக்ஸ். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இதற்கிடையில் இத்துறை சார்ந்த நிபுணர்கள் இன்னும் இந்த பணி நீக்க நடவடிக்கை தொடரலாம் என தெரிவித்துள்ளனர். இது மேற்கொண்டு ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எங்கு பணி நீக்கம்

எங்கு பணி நீக்கம்

கடந்த முறை செய்யப்பட்ட பணி நீக்கத்திலேயெ பெரும்பகுதி அமெரிக்காவில் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த முறையும் அமெரிக்காவில் தான் அதிக பணியாளர்கள் -பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க 11,000 பணியாளர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் இராண்டாவது கட்டமாக இந்த பணி நீக்க நடவடிக்கையானது வந்துள்ளது.

எந்த துறை ஊழியர்கள் பணி நீக்கம்
 

எந்த துறை ஊழியர்கள் பணி நீக்கம்

இந்த பணி நீக்கத்தில் 150 ஊழியர்கள், பல ஒப்பந்ததாரர்கள்,பகுதி நேர ஊழியர்கள் என பலரும் இதில் அடங்குவர் என தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக செய்யப்பட்ட பணி நீக்கத்தில் அணிமேஷன் பிரிவு, சமூக வலைதள மற்றும் பதிவேற்றம் செய்யும் ஊழியர்கள் என பலரும் இந்த லிஸ்டில் அடங்குவார்கள் என கூறியிருந்தது.

ஏன் பணி நீக்கம்?

ஏன் பணி நீக்கம்?

நெட்பிளிக்ஸ்-ன் இந்த நடவடிக்கையானது முதல் காலாண்டில் அதன் 2 லட்சம் சந்தாதாரர்கள் வெளியேறியதாக கூறியதை அடுத்து, அதன் பங்கு விலையானது 20% சரிவினைக் கண்டுள்ளது. இது இந்த தசாப்தத்தில் கண்ட முதல் வாடிக்கையாளர் இழப்பு எனவும் நிறுவனம் கூறியுள்ளது.

 அச்சம் ஏன்?

அச்சம் ஏன்?

முதல் காலாண்டில் 2,00,000 சந்தாதாரர்களை இழந்துள்ளதாகவும். இது அடுத்து வரும் காலாண்டிலும் கூடுதலாக 2 மில்லியன் சந்தாதார்களை இழக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆக இது நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சரிவுக்கு ஒரு மிகப்பெரிய காரணமாக அமையலாம் என்ற நிலையில் தான், நெட்பிளிக்ஸ் இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 சர்ச்சை பிரச்சனை

சர்ச்சை பிரச்சனை

சமீபத்தில் நெட்பிளிக்ஸ்-ல் ஓளிப்பரப்படும் டெவ் சேப்பலின் என்ற நிகழ்ச்சிக்கு பரவலான எதிர்ப்புகள் இருந்து வந்த நிலையில், குறிப்பாக ஊழியர்கள் மத்தியிலேயே இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.இந்த நிகழ்ச்சியினை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வந்தது. ஆனால் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தாலும் அது தொடர்ந்து ஓளிப்பரப்படும் என நெட்பிளிக்ஸ் அறிவித்தது.இதுவும் கூட ஒரு வகையில் அதன் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Netflix lay off more than 300 employees amid slowdown business

Netflix has laid off more than 300 employees, the second layoff in the current year.

Story first published: Friday, June 24, 2022, 12:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.