Xiaomi POCO F4 5G: சியோமி நிறுவனத்தின் பிராண்டான போக்கோ புதிய 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில், புதிய போக்கோ எஃப்4 5ஜி போன் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
குறைந்த விலையில் நல்ல அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வரும் போக்கோ போன்கள், இம்முறையும் அதை நிரூபித்துள்ளது. போனில் அமோலெட் டிஸ்ப்ளே, OIS கேமரா, பாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மாஸ் ஒலித்திறன் போன்ற பல அம்சங்கள் நிறைந்துள்ளது.
இலவசமாக திரைப்படங்களை பதிவிறக்க 5 சூப்பர் இணையதளங்கள்!
இந்த போன் ரூ.23,000க்கும் கீழ் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அறிமுக சலுகைகள் உதவியுடன் போனை சிறந்த விலைக்கு பயனர்கள் வாங்க முடியும். Poco F4 5G போனின் விலை மற்றும் பிற அம்சங்களை காணலாம்.
போக்கோ எஃப்4 5ஜி விலை மற்றும் சலுகைகள் (Poco F4 5G Price in India)
சீனாவில் வெளியான ரெட்மி K10S ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட போன் தான் போக்கோ எஃப்4 5ஜி என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும் சீனாவில் நற்பெயரெடுத்த போன்களை நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது.
இந்தியாவில் வெளியாகியுள்ள புதிய போக்கோ எஃப்4 5ஜி போனின் 6ஜிபி + 128ஜிபி வகை ரூ.27,999 ஆகவும், 8ஜிபி + 128ஜிபி வகை ரூ.29,999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி வகை ரூ.33,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Nothing Phone (1): நத்திங் போன் (1) வாங்கலாம் – ஆனா இப்டி பண்ணா மட்டும் தான் முடியும்!
ஆனால், இந்த போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும். ஏனென்றால், அறிமுக சலுகையாக ரூ.1000 நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், எஸ்பிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது.
எனவே, பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் ஜூன் 27ஆம் தேதி விற்பனைக்கு வரும் இந்த போனின் அடிப்படை மாடலை பயனர்கள் ரூ.23,999 மட்டும் செலுத்தி வாங்க முடியும். நெபூலா கிரீன், நைட் பிளாக் ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் இந்த போன் வருகிறது.
போக்கோ எஃப்4 5ஜி அம்சங்கள் (Poco F4 5G Specifications)
போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழுஅளவு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் இந்த டிஸ்ப்ளே இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் (Qualcomm Snapdragon 870 Processor) கொண்டு இந்த போன் இயக்கப்படுகிறது. போக்கோ எஃப்4 5ஜி போனில் 12ஜிபி வரை ரேம் + 256ஜிபி வரை ஸ்டோரேஜ் மெமரி ஆதரவும் கிடைக்கும். மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரியை நீட்டிக்க முடியும்.
Jio Recharge: ரூ.200க்கும் குறைவான ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்!
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI போக்கோ 13 ஸ்கின் இதில் நிறுவப்பட்டிருக்கும். இரட்டை ஸ்பீக்கர்கள் கொண்ட டால்பி அட்மாஸ் ஒலித்திறன், டைப்-சி போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது.
பின்பக்க கேமராவைப் பொருத்தவரை, OIS உடன் வரும் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியன அடங்கிய டிரிப்பிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.
Telecom: மாதத்திற்கு வெறும் 19 ரூபாய் போதும்… BSNL சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்கலாம்!
செல்ஃபி, வீடியோ அழைப்புகளுக்காக 20 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்படும். 5ஜி, வைஃபை6, ப்ளூடூத் 5.1 போன்ற இணைப்பு ஆதரவினையும் ஸ்மார்ட்போன் பெறுகிறது. டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், லிக்விட்கூல் 2.0 ஆதரவு போன்றவை இதில் உள்ளது.
ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4,520mAh பேட்டரியும், அதனை திறனூட்ட 67W பாஸ்ட் சார்ஜிங் அடாப்டரும் வழங்கப்படுகிறது. இதன் உதவியுடன் போனை வெறும் 38 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்து விடலாம்.
போக்கோ எஃப்4 5ஜி விவரக்குறிப்பு (Poco F4 5G Features)
6.67 இன்ச் முழு எச்டி+ அமோலெட் 120Hz டிஸ்ப்ளேகுவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வரை ஆதரவு64MP + 8MP + 2MP பின்பக்க கேமரா20MP செல்ஃபி கேமராடால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்ஸ்4,520mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங்